சென்னை:
பெரிய திரையாக இருந்தா என்ன சின்னத்திரையாக இருந்தா என்ன நம்ம திறமைக்குதான் இங்கு வேலை என்று வாய்ஸ் விட்டுள்ளார் இவர்.


அந்த வாய்ஸ்சுக்கு சொந்தக்காரர் நடிகை சோனியா. பொல்லாதவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற படங்களில் தன் நடிப்பால் கவர்ந்த சோனியாவே தான்.


சின்ன வயதில் இருந்த இவர் நடித்து வருகிறார். தற்போது சின்னத்திரையில் எண்ட்ரீ கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:


தூர்தர்ஷன்ல பூந்தளிர் கனவுகள் சீரியல்தான் என் நடிப்புக்கான அஸ்திவாரம். அப்புறம் கல்யாண கைதிகள் ரஞ்சித்தோட ஒரு சீரியல்.
பிறகு தொடர்ந்து சீரியல்கள்... சீரியல்கள்... சன் டி.வி ஆரம்பிச்சதும் முதல்ல ஆங்கரிங் பண்ணது பெருமை எனக்குதான். அதற்கு பிறகுதான் படங்கள்... படங்கள்... இப்போ மீண்டும் சின்னத்திரை எண்ட்ரி ஆகியுள்ளேன். எங்கு இருந்தாலும் நம்மோட திறமைக்குதான் மதிப்பு.



Find out more: