சென்னை:
செம ரிஸ்க் எடுக்கிறாராம்... எடுக்கிறாராம் சிறுத்தை சிவா என்று தகவல்கள் பரபரக்கின்றன.
வீரம், வேதாளம் படங்களை அடுத்து "தல" நடிக்கும் படத்தை இயக்குகிறார் சிவா. ஹாட்ரிக் அடிக்கும் முனைப்புடன் உள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடக்க உள்ளது. வெளிநாடுகளில் அதிகம் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரு பக்கம் என்றால்... இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் ஏராளமாக உள்ளதாம்.
இதற்காக முன்னணி நிறுவனம் ஒன்று இப்படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை கையில் எடுத்துக்கொண்டுள்ளது. "தல" படம் என்றால் கம்மி பட்ஜெட்... செம லாபம் என்பதுதான் இன்றைய வரைக்கும் இருக்கும் டிரெண்ட். இதை உடைத்து இந்த படத்தின் பட்ஜெட் ரூ.70 கோடியை தொட்டுவிடும் என்று கிசுகிசுக்கிறார்கள். சிவா ரொம்ப ஆழமாகவே ரிஸ்க் எடுக்கிறார் என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.
பட்ஜெட் எகிறினாலும்... வசூல் பட்டையை கிளப்பும் அளவிற்கு கதை ஸ்டாராங்க் என்று சொல்கின்றனர் படக்குழுவினர். காசுக்கேத்த தோசை.