சென்னை:
பரபரப்பை கிளப்பியவர் இப்போ... அதே போல் கதையை இயக்க உள்ளார் என்று கோடம்பாக்கம் முழுவதும் பேச்சாக உள்ளது. என்ன விஷயம் என்றால்...
விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படம் ஒருபக்கம் வசூலில் பட்டையை கிளப்ப... மறுபக்கம் இயக்குனர் முருகதாசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் மீஞ்சூர் கோபி. காரணம்... தன்னுடைய கதையை திருடிவிட்டார் என்று பரபரப்பை கிளப்பினார்.
அதோடு விட்டாரா? கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அது நமுத்து போன பட்டாசு ஆனது தனிக்கதை. இப்ப என்ன விஷயம்ன்னா? இந்த மீஞ்சூர் கோபி இப்போ நயன்தாராவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
மீஞ்சூர் கோபி

இந்த படமும் 'கத்தி' போல தண்ணீர் பிரச்னையை சொல்லும் படமாம்.
இதில் 'காக்க முட்டை' படத்தில் நடித்த சிறுவர்கள் ரமேஷ், சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஆகியுள்ளனர்.