சென்னை:
சூப்பர்ன்னு சொன்னாருங்க... எப்போதும் மறக்க முடியாத வார்த்தை அது என்று நெகிழ்கிறார் இவர். யார் தெரியுங்களா?


கபாலி புகழ் தன்ஷிகாதான். தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் முன்னணியில் இருப்பவர் தன்ஷிகா. இவர் அரவான், பரதேசியை தொடர்ந்து கபாலியில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இவரது யோகி கதாபாத்திரத்தை பாராட்டாதவர்களே இல்லை. 


இவர் தன் நீண்ட முடியை வெட்டிக் கொண்டுதான் கபாலியில் நடித்தார். இது குறித்து சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார் என்பதை சொல்லி சொல்லி பூரித்து போகிறார். 


அப்படி என்ன சொன்னார் தெரியுங்களா? டைரக்டர் ரஞ்சித் முடியை வெட்டி சொன்னதும் ஓகே சொல்லி முடியை வெட்டி வந்தேன். அதே கெட்டப்பில் ரஜினி சார் முன்பு நின்ற போது, "சூப்பர்மா, செம்ம கெட்டப்" என்று பாராட்டினார்’ என்று சொல்லி மகிழ்ந்து வருகிறார்.



Find out more: