சென்னை:
தயாரிப்பாளர்கள் சங்கம் முன்பு நூற்றுக்கணக்கான இயக்குனர்கள் திடீரென்று போராட்டம் நடத்தினால் எந்தளவிற்கு பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்படும். ஏற்பட்டு விட்டதே... 


இயக்குனர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் விக்ரமன் தலைமையில்தான் இந்த போராட்டம் நடந்தது. எதற்காக இந்த திடீர் போராட்டம்? இதற்கான விடை இயக்குனர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


அந்த மனுவில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?


தற்போது தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் கில்டு ஆகியவற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் இதில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 


எனவே இந்த குறைபாடுகளை களைய பட தலைப்புகளை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இந்த முறை இயக்குனர்களுக்கு மட்டும் அல்லாமல் எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.


ஆன்லைன் முறை சிரமமாக இருக்கும் என்று கருதினால் அதற்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேரையும் நாங்களே வடிவமைத்து தருகிறோம். இவ்வாறு தெரிவித்து இந்த போராட்டம் நடந்துள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தலைப்பு என்று காரணம் காட்டி பல பஞ்சாயத்துக்கள் நடப்பதால் இந்த போராட்டத்தை நடத்தி மனுவை கொடுத்துள்ளனர்.


Find out more: