சீனு ராமஸ்வாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, 'தர்மதுரை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 3-ந்தேதி இந்த படத்தின் இசை வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் சவுண்ட் என்ஜினீயராக உதய குமார் பணியாற்றியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்மையில் வெளிவந்த 'கபாலி' திரைப்படத்தின், ஸ்டண்ட் காட்சிகளுக்கு இவர் சவுண்ட் அமைத்து கொடுத்துள்ளார். மேலும், இவர் தர்மதுரை திரைப்படத்தில் பணியாற்றியுள்ளது, மேலும் இந்த படத்திற்கு ஒரு கவுரவமாக கருதப்படுகிறது.
உதய குமார்

தர்மதுரை திரைப்படத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவதா நாயர், ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.