நடிகரும், நடன இயக்குனரும், தயாரிப்பாளருமான பிரபு தேவா தற்போது 'தேவி (எல்)' என்ற புது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. 


இந்நிலையில் சற்று முன்னர், இந்த படத்தின் 2 இன் 1 போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த போஸ்ட்டரை ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மற்றும் பாலிவுட் நடிகர் சோனு சூத் இருவரும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் பிரபு தேவா, தமன்னா மற்றும் சோனு சூத் மூவரும் உள்ளனர். 


மேலும் இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. பிரபு தேவா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை எமி ஜாக்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Find out more: