பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகைகளான கரீனா கபூர் மற்றும் தீபிகா இருவரும் ஒருவறொருவர் பேசி கொள்வதில்லை. இவர்களுக்கு இடையே சில மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவு, கரீனா தற்போது தீபிகா மீது கடுமையான கோபத்தில் உள்ளாராம். இதன் காரணம் என்ன என்பதை நாம் விரிவாக பார்க்கலாம்.
கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதை, நாம் அனைவரும் அறிந்தோம். இந்த விஷயத்தை அவர் தனது சகநடிகையான தீபிகாவிடம், யாரிடமும் சொல்லி விடாதே என்று கூறியிருக்கிறாராம். ஆனால் தீபிகா இந்த ரகசியத்தை, எல்லோரிடமும் பகிர்ந்துள்ளார். இதனால் கரீனா, தீபிகாவிடம் கோபத்தில் பேசுவதில்லை.
சமீபத்தில் நடந்த 'மார்டானி' திரைப்படத்தின் பிரிமியர் ஷோவிற்கு, தீபிகா தனது ஆண் நண்பர் ரன்வீர் சிங்க் உடன் வந்துள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள், நீங்கள் இருவரும் திருமணம் நிச்சியம் செய்து கொண்டதாக கூறப்படுகிறதே... இது உண்மையா என்று கேட்டுள்ளார்.
இதற்கு தீபிகா, கரீனாவை தாக்கும் வகையில், நான் கர்ப்பமாக இல்லை. எனக்கு இன்னும் திருமணமோ, நிச்சியதார்த்தமோ ஆகவில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும், எனக்கு இல்லை என நக்கலாக கூறினாராம்.
சமீபத்தில் தீபிகா வெளியிட்ட அறிக்கையில்,
''ஒரு நடிகை, திருமணத்தையோ, நிச்சியதார்த்தையோ வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைத்தால், சரி அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் கரீனா கபூர், சைப் அலிகானை திருமணம் செய்த பின்பு, கர்ப்பமாகி இருப்பதை ஏன் அனைவரிடமும் மறைக்க வேண்டும். இந்த விவகாரம் என்னவென்றே புரியவில்லை... அவர் அடுத்த படத்தில் நடிக்க இப்போ தயாராகிறார். ஒரு வேளை கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால், தனக்கு படவாய்ப்புகள் குறைந்து போய் விடும் என்று நினைக்கிறாரோ என்னவோ...''
இதை அறிந்த கரீனா கபூர், தீபிகாவிற்கு சரமாரியாக போனில் திட்டு கொடுத்துள்ளார்....