மும்பை:
நட்புக்காகவா... நட்புக்காகவா என்று கோலிவுட், பாலிவுட் வட்டாரங்களே அதிசயித்து போய் உள்ளது. எதற்காக தெரியுங்களா?


பிரபுதேவா நடிக்கும் தேவி பட போஸ்டரை ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் வெளியிட்டால் வாயை பிளக்காமல் என்ன செய்வார்கள். ஆனால் இதற்கு பின்னால் இருக்கிறது நட்பு என்ற பெரிய விஷயம். 


பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘தேவி’. இதில் தமன்னா, இந்தி நடிகர் சோனு ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில்தான் இப்படத்தின் போஸ்டரை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் வெளியிட்டுள்ளார்.


தேவி படத்தில் நடித்துள்ள சோனுவும், ஜாக்கிசானும் ஹாலிவுட் படமான ‘குங்பூ யோகா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அந்த நட்புக்காகத்தான் இந்த படத்தின் போஸ்டரை ஜாக்கிசான் வெளியிட்டு அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளார். 



Find out more: