சென்னை:
பாட்டே இல்லாட்டிலும் பரவாயில்லை... படத்தை ரிலீஸ் செய்தே தீருவேன் என்று இவர் கங்கணம் கட்டிக் கொண்டு வேலைகளை தொடங்கி வருகிறாராம்.


சிம்புவை ஸ்டைலிஸ் நடிகராக மாற்றியதே கௌதம் மேனன்தான். இவரோட மீண்டும் கூட்டணி போட்டு அச்சம் என்பது மடமையடா படத்தை தொடங்கினார். முடியும் தருவாயில் சம்பளம் தரவில்லை என்று ஒரு படத்திற்கு நடித்து கொடுக்காமல் ஜகா அடித்துவிட்டார் சிம்பு.


இந்த வம்பால் நொந்து போன கௌதம் மேனன் டீசரிலேயே ஹிட் அடித்த அந்த பாட்டு படத்தில் இடம் பெறாமல் இருந்தாலும் பரவாயில்லை என்று படத்தை திரைக்கு கொண்டு வர மும்முரமாகிட்டாராம். தள்ளிப்போகாதே பாடலால் தான் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பே ஏற்பட்டது. ஆனால் சிம்புவின் வம்பால் இப்படி படம் தத்தளிக்கிறது.



Find out more: