மும்பை:
மன்னிச்சுக்கோங்க... வர முடியாததற்கு மன்னிச்சுக்கோங்க என்று சொல்லியிருக்காங்க...
யார் என்று தெரியுங்களா? ராதிகா ஆப்தேதான் அவர். காரணம்... கபாலி படம் போடு போடுன்னு வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே.

படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ராதிகா ஆப்தேவின் யதார்த்தமான நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக இருந்தது. இந்நிலையில் ‘கபாலி’ படத்திற்கான புரோமோஷன்கள் எதிலும் இவர் தலை காட்டவில்லை. இதனால் படக்குழு வருத்தத்தில் இருந்ததாம்.
இந்நிலையில், ‘கபாலி’ புரோமோஷன்களில் பங்கேற்க முடியாதது குறித்து ராதிகா ஆப்தே வருத்தம் தெரிவித்தும் மன்னிப்பும் கேட்க கபாலி படக்குழு இப்போ சமாதானம் ஆகியிருக்காம். இவர் புரோமோஷன்களில் பங்கேற்காததற்கு காரணம் தற்போது நடித்து வரும் ‘கோல்’ இந்தி படம்தானாம்.