சென்னை:
தன்னை தூற்றியவர்களை கூட மன்னிக்கும் மனப்பாங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உண்டு. அரசியல் நோக்கில் தன்மீது சேற்றை வாரி பூசிய ஆச்சி மனோரமாவையே மன்னித்து தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் ரஜினி. தற்போது இவரது பாணியை பின்பற்றுகிறார் சிம்பு என்கின்றனர்.


சிம்பு என்றாலே வம்புதான் என்று கோலிவுட் முழுவதும் பேச்சு இருந்து வருகிறது. அவர் பிரச்னையை தேடி போகிறாரோ... இல்லியோ... அவரை சுற்றி எப்போதும் பிரச்னைகள் ஒட்டிப்பிறந்த உடன்பிறப்பு போல இருந்து வருகிறது. 


"பீப்" சாங் விவகாரம் பற்றி புதிதாக சொல்ல தேவையில்லை. பெரிய அளவில் சிம்புவின் இமேஜை டேமேஜ் செய்த பிரச்னை அது. அந்த நேரத்தில் சிம்புவை கடுமையாக விமர்சித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். 


தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க சிம்பு நடிக்கும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒய்.ஜி. ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அதாவது ரஜினி போக்கை சிம்பு பாலோ செய்கிறார் என்கின்றனர் கோடம்பாக்கம் கோபாலுக்கள்.



Find out more: