சென்னை:
தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று இவரை பற்றி கோலிவுட்டில் ஒரு செய்தி பரபரப்பாக உலா வருகிறது. யார் என்று பார்ப்போமா!
மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்து அனைவரது உள்ளத்திலும் ஆழமாக பதிந்தவர் சாய் பல்லவி. இவரை பற்றிதான் கோலிவுட்டில் ஒரு செய்தி உலா வருகிறது. இவர் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று. காரணம் தமிழில் கவர்ச்சியாக நடிக்க சொல்வார் என்பதால் என்று சொல்கின்றனர்.
முதலில் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுப்பு சொன்ன இவர்.. தற்போது "தல" படத்திலும் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். காஜல் அகர்வால், அக்சராஹாசன் ஆகியோர் புக் செய்யப்பட்ட நிலையில்தான் சாய்பல்லவியை அணுகி உள்ளனர் படக்குழுவினர். அப்போதுதான் அவர் இருகையையும் விரித்து இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியதாக செய்திகள் பரபரக்கின்றன. டீச்சர் தமிழ் படத்தில் நடித்துதான் உங்க மலையாள நடிகைகள் பேரும், பணமும், புகழும் பெற்றார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்க...