சென்னை:
டான் "கபாலி"யால் வெளியிடாமல் இருந்த படங்கள் இப்போது திரைக்கு வர உள்ளதாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி கடந்த 22-ம் தேதி வெளியானது. சினிமாவின் மிகப்பெரிய டான் ஆன கபாலியால் பல படங்களின் வெளியீட்டுத் தேதிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
அது ஜோக்கர், தொடரி, தர்மதுரை போன்ற படங்கள்தான். இப்போது வசூலில் அள்ளு அள்ளு என்று கபாலி அள்ளிவிட்டதால் இனி தங்கள் படங்களை களம் இறக்கலாம் என்று முடிவு செய்துள்ளனராம் நடிகர்கள்.
இருந்தாலும் இன்னும் ஒரு வாரத்துக்கு கபாலியின் தாக்கம் திரையரங்குகளில் இருக்கும் என்பதால் ஆகஸ்ட் 12-ம் தேதி ஜோக்கர் வெளியாகிறதாம். இதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள தர்மதுரை, கே.எஸ். ரவிகுமார் இயக்கியுள்ள முடிஞ்சா இவனை பிடி, விக்ரம் பிரபுவின் வாகா, தனுஷின் தொடரி போன்ற படங்களும் 12ம் தேதி திரைக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.