சென்னை:
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான்தான் உலகிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி என்று பெருமிதப்பட்டுள்ளார் இவர். யார் தெரியுங்களா?


கபாலி "யோகி"தான். 'கபாலி' படத்தில் ரஜினிக்கு அடுத்து அனைவரும் பாராட்டுவது யோகியாக நடித்திருந்த தன்ஷிகாவைதான். தற்போது இவரது கிரேட் உயர்ந்துள்ளது.


இதற்கிடையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தன்ஷிகா கூறிய பதில் "தல" ரசிகர்களிடம் பெரும் மரியாதையை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்...  "தல" அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த சந்தோஷத்தை எப்படி உணர்வீர்கள் என்று ரசிகர் கேட்க... இதற்கு தன்ஷிகா, "அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி நான்தான்' என்று போட்டுள்ளார் பெரிய போடாக. 


அப்போ... "தல"யின் அடுத்த படத்தில் அம்மணிக்கு சான்ஸ் கிடைக்குமா? எது வேண்டுமானாலும் நடக்கலாம்.



Find out more: