வம்பு நடிகர் தற்போது மூன்று கெட்டப்களில் ஒரு புது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு கதாநாயகியாக 'சிவாஜி' நடிகை நடித்துள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக அடுத்த நடிகையை படக்குழுவினர் தேர்ந்தெடுத்து வருகின்றனர். 


இந்நிலையில், இன்னொரு கெட்டப்பில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க சுரேஷ் நடிகையை கேட்டனர். ஆனால் அவர் நோ சொல்லிவிட்டார். என்ன காரணம் என்று தெரியவில்லையாம்.


இதையடுத்து வம்பு நடிகரோடு ஏற்கனவே ஜோடி போட்ட ஹான்ஸ் நடிகையை, படக்குழுவினர் கேட்டுள்ளனர். ஆனால் அவர் எத்தனை கோடி நீங்கள் தந்தாலும், நான் இவரோடு நடிக்க மாட்டேன் என பயந்து ஓடிவிட்டாராம். 


இதனால்  படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்காக, தீவிரமாக ஹீரோயினை தேடுகிறார்களாம். 



Find out more: