கேரளா:
துல்கர் சல்மானை வைத்து நம்ம ஊரு பிரதாப் போத்தன் இயக்க இருந்த படம் தள்ளி போய் உள்ளதா... இல்லை டிராப் ஆகிவிட்டதா என்பதே பரபரப்பான செய்தியாக உள்ளது.


இப்போ மலையாளத்தில் பிரதாப் போத்தன் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கலாம. ஆனால் அவர் ஒரு காலத்தில் இயக்குனர். கமல், பிரபு நடிப்பில் வெளிவந்த வெற்றிவிழா இவர் இயக்கிய படம்தான். 


படங்களை இயக்குவதில் இருந்து சற்றி ஒதுங்கியிருந்த பிரதாப்போத்தன், துல்கர் சல்மானை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இப்படத்தின் ஸ்கிரிப்டை அஞ்சலி மேனன் எழுத படப்பிடிப்புக்கு அனைவரும் கிளம்ப இருந்த நிலையில் படம் தள்ளிப் போயுள்ளது.


இதற்கு காரணமாக பிரதாப் போத்தனின் முன்கோபம் சொல்கிறார்கள். இவர் படத்தை முடிப்பாரா என்று தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் படம் தள்ளிப் போனதுக்கு காரணமாம். ஆனால் இன்னொரு தரப்பினரோ... பிரதாப்போத்தன், ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருப்பதால் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளதாக கூறுகின்றனர். எது உண்மையோ... அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...



Find out more: