பிரபல நடிகர் விக்ரமின் மகள்  அக்ஷிதாவிற்கும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கொள்ளு பேரனுக்கும் சமீபத்தில் திருமண நிச்சியதார்தம் நடைபெற்றதை நாம் அறிந்தோம். 


இதையடுத்து தற்போது அக்ஷிதாவிற்கு ஒரு திடுக்கிடும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்... அது என்னவென்பதை இப்போது விளக்கமாக பார்க்கலாம்.


நேற்று அக்ஷிதா, ஆயிரம் விளக்கு, காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்துவிட்டு, வெளியே வந்து பார்த்த போது, அக்ஷிதாவின் வைர மோதிரம் காணவில்லையாம். 


யாரோ எனது மோதிரத்தை திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு 12 லட்சம். அதனால் கண்டுபிடித்து தாருங்கள் என போலீசிடம்  புகார் அளித்துள்ளாராம். 


இந்த வைர மோதிரம், நிச்சியதார்த்த மோதிரமாக இருக்கலாம். அதனால் தான் அக்ஷிதா இவ்வளவு டென்ஷனாக உள்ளார் என தற்போது கிசுகிசுக்கபடுகின்றன.



Find out more: