சென்னை:
இவரை பார்த்தால் நான் தெறித்து ஓடுவேன்... இப்படி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்தவர் யார் தெரியுங்களா?


வேறு யாரு... இயக்குனர் பாலாதான்... இப்படி சொன்னவர். இயக்குனர் பாலா மிகவும் முரடானவர். இவர் படத்தில் நடிப்பது என்பது சாதரண விஷயமில்லை, பலரும் இவரிடம் பேசவே பயந்து நடுங்குவார்கள் என்று இவருக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டது கோலிவுட்.
ஆனால் நெருங்கி பழகியவர்களுக்குதான் தெரியும் பாலா ஒரு குழந்தை போல் என்று.


இந்நிலையில் தர்மதுரை இசை வெளியீட்டு விழாவில் பாலா ‘நான் சீனுராமசாமியை பார்த்தாலே பயந்து ஓடிவிடுவேன் என்று சொன்னார் பாருங்க... விழா மேடையே சிரிப்பால் அதிர்ந்தது. அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான்... எப்போதும் சினிமா, சினிமா, சினிமா என பேசிக்கொண்டே இருப்பார். இரவு 1 மணிக்கெல்லாம் போன் செய்து கதை சொல்வார்’ என்று தான் பயந்து ஓடுவதற்கு காரணத்தை கூறினார் கலகலப்பாக.


Find out more: