சென்னை:
இதுதான்... இதுதான் என்று ஒரு கதை உலா வருகிறது ரசிகர்கள் மத்தியில். எந்த படத்தின் கதை தெரியுங்களா?


விக்ரம் நடிப்பில் இருமுகன் படத்தை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் ட்ரைலர் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ரசிகர் மத்தியில் இருமுகன் படத்தின் கதை இதுதான் என்று ஒரு கதை உலா வருகிறது.


‘நயன்தாரா, விக்ரம் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொள்கின்றனர். இதில் நயன்தாரா ஒரு சிலர் செய்யும் சதி வேலையால் மரணத்தை தழுவ, இதனால் விக்ரம் தன் ஹார்மோன்ஸை மாற்றி பெண் தனமை கொண்டவராக மாறுகிறார்.


மற்றொரு விக்ரம் இருப்பதை அறிந்த இவர் அவரை அடைய என்னென்ன வேலைகள் செய்கிறார் என்பதே கதை என்று உலா வருகிறது. இது உண்மையா? பொய்யா என்று அறியாமல் ரசிகர்களும் தொடர்ந்து தங்கள் நட்பு வட்டாரத்தில் இதை ஷேர் செய்தி வருகின்றனர். 


Find out more: