ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் வெளிவந்த 50-தாவது திரைப்படம் 'தெறி' என்பதை நாம் பார்த்தோம். இதையடுத்து அவர் இசையமைத்த 51-வது திரைப்படம் 'மீண்டும் ஒரு காதல் கதை'. 



இந்த படம் வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி, திரையரங்கில் ரிலீஸ் ஆகுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 5-ந்தேதி வேறு சில தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகுவதால், வசூல் பாதிக்கப்படும் என்று கருதி இந்த படத்தை 2 வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்களாம். 


சென்சார் அதிகாரிகளிடம் இருந்து  'யு' சான்றிதழ் பெற்ற இந்த திரைப்படத்தின் திரையரங்கு உரிமைகளை, கலைப்புலி தாணு பெற்றுள்ளார். மித்ரன் ஜவஹர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் வாட்டர் பிலிப்ஸ் மற்றும் இஷா தல்வார் இருவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 


மேலும் இப்படம் மலையாளத்தில் வெளிவந்த 'தட்டத்தின் மறையாது' திரைப்படத்தின் ரீமேக்காகும். 


Find out more: