'வேதாளம்' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித், மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில், தனது 57-வது திரைப்படத்தில் நடிக்கிறார். நேற்று முன்தினம் தொடங்கிய இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது பெல்கிரேட்டில் நடைபெற்று வருகின்றது. 


இதில் அஜித், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவரது மனைவியாக காஜல் அகர்வாலும், இன்னொரு நாயகியாக உலகநாயகனின் மகள் அக்ஷரா ஹாசனும் நடிக்கின்றனர். 


ஆக்ஷன் கதையாக உருவாகும் இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாட்டிலும், 30 சதவீத படப்பிடிப்பு இந்தியாவிலும் நடைபெற இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இவர் இசையமைப்பில் மொத்தம் 4 பாடல்கள், இப்படத்தில் இடம்பெறவுள்ளன. 


'வேதாளம்' திரைப்பட பாடல்கள், அமோக வரவேற்பு பெற்றதை போல தல 57 திரைப்பட பாடல்களும் ஹிட்டாக வேண்டும் என்று அனிருத் தற்போது இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறாராம். 


மேலும் தல 57 அடுத்த ஆண்டு ஏப்ரல் 2017-ல் வெளிவரும் என கூறப்படுகிறது. 


Find out more: