பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. இவரை பற்றி நாம் தெரிந்திராத 10 விஷயங்களை இன்றைக்கு நாம் விரிவாக பார்க்கலாம்.
1. படப்பிடிப்பின் ஒய்வு நேரத்தில், இவர் படக்குழுவினருடன் வெளியே அமர்ந்து கொண்டு கேரம் விளையாட்டு விளையாடுவார்.

2. விலை உயர்ந்த பி.எம்.டபிள்யு, பென்ஸ் உள்ளிட்ட கார்கள் என்றால் சாலமனுக்கு மிகவும் பிடிக்கும்.

3. அவர் உடற்கட்டை மேம்படுத்துவதில், அர்ஜுன் கபூர், சைப் அலி கான், அனில் அக்பூர் ஆகியோரின் அறிவுரைகளை பின்பற்றுவார்.

4. உடம்பை பிட்டாகவும், ட்ராபிக்கை தவிர்ப்பதற்காகவும் அவர் சைக்கிளில் வெளியே செல்வார்.

5. பிரியாணி என்றால் சல்மானுக்கு மிகவும் பிடிக்கும்.அவர் அடிக்கடி பிரியாணி தான் சாப்பிடுவார். மேலும் எண்ணெய் சேர்க்கப்பட்ட பொறித்த அசைவ உணவுகளை விட, அவித்த அசைவ உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவார்.

6. பள்ளி பருவத்தில், அவர் தான் சிறந்த நீச்சல் போட்டியாளராம்.

7. ஆரம்ப காலத்தில், சல்மான் சினிமாவில் கஷ்டபடும் போது, அவர் தனது தந்தை சலீம் கானின் பெயரை ஒரு போதும் உபோயோகப்படுத்தியதில்லை. எந்த ஒரு சிபாரிசும் இல்லாமல் தான் அவர் இப்போது இந்த நிலையில் உள்ளார்.

8. இவருக்கு பிடித்த டூரிஸ்ட் இடம் லண்டன்.

9. ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது சல்மான் கானுக்கு மிகவும் பிடிக்கும்.

10 இவர் பார்ப்பதற்கு முரட்டுதனமாக இருந்தாலும், மிகவும் இரக்க குணம் உள்ளவராம்.
