சென்னை:
நடிகை சரிதாவை யாராலும் மறக்க முடியாது. அதுபோல் அவரது சகோதரி நடிகை விஜி. இவர்களின் குடும்பச் சொத்து கண்கள்தான் போலிருக்கு. இந்த குடும்பத்திலிருந்து சினிமா களத்துக்கு வருது ஒரு இளமைப்புயல்.
ஆரோகணம் படம் விஜி சந்திரசேகரனை மீண்டும் லைம் லைட்டிற்கு கொண்டு வந்தது. அதற்கு பிறகு வந்த வெற்றிவேல் படத்தில் ஏறத்தாழ அவர்தான் வில்லன். அந்தளவிற்கு அந்த படத்தில் கொடூரமாக நடித்திருந்தார். இவரோட வாரிசுதான் இப்போ சினிமா களத்தில் குதிக்கிறார்.

அப்படியே அம்மாவின் கண்களை கொண்டுள்ளார். இந்த இளமைப்புயலின் பேரு லவ்லின். துபாயில் படித்து வரும் இவர் படிப்பு இடையில் நடிப்புத்திறமையை காட்ட வருகிறாராம். வாங்கம்மா... வாங்க...