சென்னை:
பற்ற வைத்த எரிமலை போல் இருக்கே... அங்கே போக முடியுமா என்று படக்குழு தவித்து வருகிறதாம். யார் என்று தெரிஞ்சுக்குவோம். வாங்க....
இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை முதல் ஷெட்யூல் ஊட்டியில் பினிஷ் ஆகிடுச்சு. அடுத்ததா சென்னை, காஷ்மீரில் படமாக்க நினைச்சிருந்தார்.
ஆனா இப்போ... காஷ்மீரில் நடந்து வரும் பிரச்னையால் என்ன செய்வது... அனுமதி கிடைக்கும் என்று ரொம்பவே யோசிக்கிறாராம். அட இதெல்லாம் உங்களுக்கு புதுசா சார்... கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் இலங்கை காட்சிகளை அச்சு அசல் போல் செட் போட்டு கலக்கிய ஆள்தானே நீங்க... காஷ்மீரை சென்னையிலேயே செட் போட்டு எடுத்துடுங்க என்கிறார்களாம் அவரது அடிப்பொடிகள். ஒத்துக்குவாரா? ஒதுக்குவாரா... தெரியலையேப்பா....