சென்னை:
இப்ப இவரு உஷாரு போல... ஒரு காலத்துல இவரு உதட்டை வைச்சு வம்பு செஞ்ச வம்பு எல்லாரும் அறிந்ததுதான். ஆனால் மேட்டர் அது இல்லீங்க... என்ன விஷயம்ன்னா...


தொடர்ந்து டப்பா படங்களை கொடுத்து பப்படம் ஆகியுள்ள ஜீவா ரொம்ப எதிர்பார்த்து இருப்பது திருவிழா படத்தைதான். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கு. இந்த படத்தின் வெற்றிதான் ஜீவாவுக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட்... எல்லாமே...


கிராமத்து பின்னணியில் வெளியாகியுள்ள இப்படத்தை ராம்நாத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா ஜீவாவுடன் ஈ படத்திற்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.


இப்படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்காங்க... லேடி சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ள அதில் ஜீவா நயன்தாராவுக்கு முத்தம் தர முயலும் போது நயன்தாரா வாயிலிருந்து பிளேடை எடுப்பது போல் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பிளேடை நீங்க வம்பு செய்த வம்பின் போதே எடுத்து இருக்கலாம் மேடம்....


Find out more: