சென்னை:
மேலும் மேலும் மேலும் என்று கபாலி சாதனைகளின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கிறது. உலக அளவில் கபாலியின் சாதனைகள் உச்சத்தை தொட்டு விட்டன.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. கபாலி தான் 'மலாய்' மொழியில் டப் செய்யப்பட்டு வெளியான முதல் தமிழ்ப் படம் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.


 இந்நிலையில் மலாய் பதிப்பு 'கபாலி' வரும் 26ம் தேதி முதல் தாய்லாந்து, இந்தோனேஷியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி பதிப்புகளின் வசூல் மட்டுமே ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக சொல்றாங்க. இதில் மலாய் பதிப்பும் தற்போது 3 நாடுகளில் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.



Find out more: