சென்னை:
வரலை... வந்தாலும் எங்க வீட்டில் எந்த பிரச்னையும் வராது என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார் இவர். யார் தெரியுங்களா?
வேறு யாரு. இப்போதைய வாண்டட் நடிகை கீர்த்தி சுரேஷ்தான். நடித்தது என்னவே 2 படங்கள் என்றாலும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் இவர் தற்போது தெலுங்கிலும் கால் பதிக்க உள்ளார்.
இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் எந்த படத்திலும் கிளாமராக நடிக்க மாட்டேன். அது எனக்கு ஒத்தும் வராது. தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். அங்கும் யாரும் என்னை கிளாமராக நடிக்க வற்புறுத்தவில்லை. (அப்ப நீங்களே அங்கு கிளாமரா நடிப்பீங்களா அம்மணி)
அதிக படங்கள் ஒத்துக்கிட்டு நடிக்கணும்னு நினைக்கலை. என் வாழ்வில் இதுவரை காதல் வரலைங்க... அப்படியே வந்தாலும்...எங்கள் வீட்டில் எவ்வித பிரச்னையும் வராது. ஏன் தெரியுமா... ஏன் தெரியுமா? என் பெற்றோரே காதல் திருமணம் செய்தவர்கள்தான் என்று அதிரடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்ப அப்ளிகேஷன் போட யார் யார் ரெடிங்க...?