மும்பை:
எனக்கே தெரியாமல் என் திருமணம் பஞ்ச் அடித்து பஞ்சராக்கி உள்ளார் உலகத்தின் வாரிசு.
மூன்று வுட்டிலும் திறமையை காட்டி வருபவர் உலக நாயகன் வாரிசு ஸ்ருதிஹாசன். ரெஸ்ட் எடுக்க நேரம் இல்லாமல் சுற்றி சுற்றி வருகிறார்.
ஸ்ருதிஹாசன் தற்போது சிங்கம்-3 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சூட்டிங் பரபரவென்று நடந்து வரும் நிலையில் இவர் மும்பை தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கிளப்பிச்சு பாருங்க ஒரு வதந்தி... தந்தி... போல இது கிடுகிடுவென்று அனைத்து ரசிகர்களையும் சென்றடைய... ஆளாளுக்கு விசாரிப்பில் இறங்கி விட்டனர்.
இந்த இணைய தள செய்திக்கு பதிலடி கொடுப்பதுபோல் டைட் ஷெட்யூலில் கூட ஸ்ருதிஹாசன் ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். என்ன தெரியுங்களா? ‘ஓகே அப்பறம்’ என்பதுதான் அது. அதுமட்டுமா... எனக்கே தெரியாமல் எப்படி என் திருமணம் தகவல்கள் இவர்களுக்கு தெரிகிறது என்று வைத்துள்ளார் ஒரு பஞ்ச்.