சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில், இன்னும் முன்னணி ஹீரோயினாக நடித்து வரும் த்ரிஷா, தற்போது ஹீரோயினை சார்ந்து உருவாகும் 'மோகினி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தை மாதேஷ் இயக்குகிறார். இதில் கணேஷ் வெங்கட்ராமன், யோகி பாபு, ஸ்வாமிநாதன், மாஸ்டர் கணேஷ், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


கடந்த சில மாதங்களாக லண்டனில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பை அடுத்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் சமையல் செப்பாக நடித்து வரும் த்ரிஷா இந்த படப்பிடிப்பில் சில ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க உள்ளாராம். 


இந்த படப்பிடிப்பில் தன்னை வீழ்த்த வரும் எதிரிகளை, ஆக்ஷனில் போட்டு தாக்கப் போகிறாராம். இதற்காக அவர் தற்போது ஸ்டண்ட் இயக்குனரிடம் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: