கார்த்தி நடிப்பில் அடுத்து 'காஷ்மோரா' திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் திரையரங்கு வியாபரங்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 


இதையடுத்து கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விமான ஓட்டுநராக நடிக்கும் இவர், முதன்முறையாக மீசை தாடி இல்லாமல் நடிக்கிறார் என்பதை நாம் முன்பே அறிந்தோம். 


இதை தொடர்ந்து, தற்போது அவர் அதிக உடல் எடை மெலிந்து, காணப்படும் நியூ கெட்டப் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, கார்த்தி 20 கிலோவிற்கு மேல் உடல் எடை மெலிந்திருப்பார் என தெரிகிறது. 


'ஐ' திரைப்படத்தில் விக்ரம் உடல் எடை மெலிந்து நடித்ததை போல, கார்த்தி இந்த படத்திற்காக அதிக உடல் எடை மெலிந்துள்ளார்.மேலும் இந்த படம் அவருக்கு விருதுகளை குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Find out more: