1963-ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் நடித்த ‘பெரிய இடத்துப் பெண்’ திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. அதன் பிறகு ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளின்  திரைப்படங்களில் நடித்தார். 


எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பழம்பெரும் நடிகர்களில் இருந்து, ரஜினி, விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் வரை பணியாற்றினார். சினிமாவில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். 


சமீப காலமாக இரத்தப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ஜோதிலட்சுமி, நேற்று இரவு சென்னை திநகரில் காலமானார். இவரது மறைவிற்கு திரைத்துறையினர் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மேலும், அவரது இறுதி சடங்கு இன்று மாலை கன்னமாபேட்டை மையானத்தில் நடைபெறுகிறது. 


Find out more: