தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'ஆதித்யா 369' திரைப்படம், உருவாகும் போது சில ரகசியங்கள் நடந்துள்ளன. அவை தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை இப்போது நாம் விரிவாக பார்க்கலாம்.
1. இந்தியாவிலே இதுவரை எடுக்கப்படாத கால பயண திரைப்படம்
2. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, 'ஆதித்யா 369' திரைப்படத்தை, தூர்தர்ஷன் சேனலில் ப்ரொமோட் செய்தார். இந்த படத்தின் டிரைலரை டிசைன் செய்வதில், அவர் தனி அக்கறை காட்டியுள்ளார்.
3. இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு முதலில் விஜயசாந்தி தான் தேர்வு செய்யப்பட்டார். கால்ஷீட் இல்லாத காரணத்தால், அவருக்கு பதில் படக்குழுவினர் மோகினியை தேர்வு செய்தனர்.
4. இந்த படம் உருவானதற்கு முக்கிய காரணம் பாலகிருஷ்ணா தான். அவர் இல்லையெனில் இப்படம் உருவாக சாத்தியமில்லை.
5. இந்த படத்தில் பி.சி.ஸ்ரீராம், கபீர் லால், வி.எஸ்.ஆர் ஸ்வாமி ஆகிய மூன்று ஒளிப்பதிவாளர்களும் பணியாற்றினர்.
6. இந்த படத்தின் பட்ஜெட் 1.6 கோடி, ஆனால் வசூல் ஆனது 9 கோடிகள். கர்நாடகாவில் மட்டும் 25 லட்சம் வசூல் ஆகியுள்ளது.
7. இந்த படம் தமிழில் 'அபூர்வ ஷக்தி 369' என்றும், ஹிந்தியில் 'மிஷன் 369' என்றும் டப் செய்து வெளியிடப்பட்டது.
8. இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் எஸ்.பி.பி தான் பாடினார். மேலும் டீனு ஆனந்த் ரோலிற்கு இவர் தான் டப்பிங் பேசினார்.
9. இந்த படத்தில் டீனு ஆனந்தின் தோற்றம், விஞ்ஞானி ஐன்ஸ்டின் போல இருக்கும்.
10. இந்த படத்தில் நடன இயக்குனர் பிரபு தேவா, பாலகிருஷ்ணாவுடன் பணியாற்றியுள்ளார்.