சென்னை:
பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி (68) ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.


கடந்த 1963ல் எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப் பெண் படத்தின் வாயிலாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. 1970களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய டிஜிட்டல் வரை சினிமா, சின்னத்திரை என தன் நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர் ஜோதிலட்சுமி. 


இவர் தமிழ், தெலுங்கு உட்பட 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது கவர்ச்சி நடனத்திற்காக ஓடிய படங்களும் உண்டு. சமீபகாலமாக சீரியலிலும் சக்கைப்போடு போட்டு வந்தார். இந்நிலையில் ஜோதிலட்சுமி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.


அவரது உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெற உள்ளது.



Find out more: