தயாரிப்பாளர் சிவி குமார் தற்போது, முதன்முறையாக 'மாயவன்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் திரையரங்கில் வெளிவர உள்ளது. 


இதையடுத்து அவர் தனது 'திருக்குமரன் என்டேர்டைன்மெண்ட்' சார்பில் ஒரு புது படம் தயாரிக்க உள்ளார். அந்த படத்தில் 'மெட்ராஸ்' மற்றும் 'கபாலி' திரைப்படத்தில் நடித்த கலையரசன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். 


இந்த படம் மூன்று ஹீரோக்களை கொண்டு உருவாகவுள்ளது. இதில் கலையரசன், வைபவ், காளி வெங்கட்  உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த, அறிமுக இயக்குனர் ஜானி இந்த படத்தை இயக்கவுள்ளார். 


மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Find out more: