1990-ல் இருந்து பல வெற்றி திரைப்படங்களில் சிறப்பாக நடித்து வந்த கவுதமி, சமீபத்தில் வெளிவந்த 'பாபநாசம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ,மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அண்மையில் இவர் மலையாள ஸ்டார் மோகன் லால் உடன் இணைந்து நடித்த 'நமது' திரைப்படம் வெளிவந்து, தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது.
இந்நிலையில் அவர் தற்போது வேறு ஒரு புது படத்தில் நடிக்க புக்காகி உள்ளார். இளைய திலகம் பிரபு உடன் இணைந்து அவர் ஓர் புது படத்தில் நடிக்க போகிறாராம். இந்த தகவலை கவுதமியின் மேலாளர் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
மேலும் 'ராஜா கைய வச்சா' திரைப்படத்திற்கு பிறகு 26 வருடங்கள் கழித்து கவுதமி, பிரபு உடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
