சென்னை:
தெலுங்கில் குறைந்தால் என்ன? தமிழில் சக்கைப்போடு போடும் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். எதற்காக தெரியுங்களா?
விக்ரம் நடிப்பில் இருமுகன் படம் வரும் செப்.2ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தெரிந்த விஷயம். கோலிவுட் போல் தெலுங்கிலும் விக்ரமின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். "ஐ" படம் அங்கு செம கல்லா கட்டியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அடுத்து வந்த 10 எண்றதுக்குள்ள படம் மண்ணை கவ்வ... இதனால் தற்போதைய இருமுகன் படத்தை தெலுங்கு விநியோகஸ்தர்கள் குறைந்த விலைக்கு வாங்கி இருக்காங்களாம்.
இதை ஒரு டிவி சேனல் செய்தியாக வெளியிட, ரசிகர்கள் சோர்ந்து போய்விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழில் படம் சக்கைப்போடு போடும் என்று ரசிகர்கள் செம உற்சாகமாக இருக்கின்றனராம்.