சென்னை:
இவ்வளவா... இவ்வளவா... வாயை பிளந்து பெருமூச்சு விடுகிறது கோலிவுட் காரணம்... கபாலிதான்... கபாலியின் வசூல் வேட்டைதான்.
கபாலி படம் வெளிவந்து 3 வாரங்கள் ஆகிவிட்டது. இன்னும் இப்படத்திற்கு நல்ல கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய தகவலின்படி இப்படம் ரூ.600 கோடியை கடந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவின் முன்னணி வர்த்தக இதழ் ஒன்று இப்படம் ரூ,.677 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இதில் படத்தின் விளம்பரம், ஆடியோ, சாட்டிலைட் ரைட்ஸ் என அனைத்து அடங்கும் என கூறியுள்ளனர், இதை வைத்து பார்த்தால் சீன மொழியில் ரிலீஸ் செய்தால் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படம் என்று கபாலி முதல் இடத்திற்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றனர். கபாலியின் வசூல் வேட்டை தொடர்கிறது...