நடன இயக்குனர் பிரபு தேவா நடிப்பில் தற்போது 'தேவி (ல்)' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 9-ந்தேதி, 'தேவி (ல்)' திரையரங்கில் ரிலீஸ் ஆகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 


ஆனால் தற்போது இதன் ரிலீஸை செப்டம்பர் கடைசி தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதே போல, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'போகன்' திரைப்படம் இந்த மாதம் வெளிவருவதாக கூறப்பட்டிருந்தது. 


ஆனால், தற்போது கபாலி திரைப்படம் தியேட்டர்களில் ஓடி வருவதால், இதை ரிலீஸ் செய்தல் வசூலில் பாதிப்படையும் என்று கருதி, நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். 


எனவே இந்த இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டு திரைப்படத்தையும் பிரபுதேவா தான் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Find out more: