ஐதராபாத்:
எப்போ... எப்போ... என்று காத்திருக்கிறார்கள் தெலுங்கு ரசிகர்கள். யாருக்காக தெரியுங்களா?


உலக நாயகனின் வாரிசு ஸ்ருதிக்காகத்தான் இந்த காத்திருப்பு. 


மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'பிரேமம்' திரைப்படம் அதே டைட்டிலில் தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் மும்முரமாகி உள்ளது. 


இப்படம் வரும் செப்.9-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் சூர்யதேவரா நாகவம்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் அறிவித்தார் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். ஏன் தெரியுங்களா... மலையாளத்தில் 'மலர்' டீச்சர் கேரக்டரில் தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடிப்பதுதான். சீக்கிரம் வாங்க... மலர் டீச்சரே...


Find out more: