சென்னை:
இவ்வளவு... அவ்வளவு என்று கட்டுக்கதை சொல்லாதீங்க... இவ்வளவுதான் என்று போட்டு உடைத்துள்ளது ஒரு இணைய தளம் செய்தியில். விஷயம் இதுதாங்க...
சிங்கம்-3 வியாபாரம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு நடந்துடுச்சு என்று ஒரு பரபரப்பு கிளம்பிச்சு. அட பரவாயில்லையே என்று ரசிகர்கள் நினைத்திருக்க... இங்குதான் ஏற்பட்டுச்சு பாருங்க ஒரு டுவிஸ்ட்டு.... கேரளாவில் மட்டுமே ரூ 5.30 கோடி வரை படத்தை விலை கொடுத்து வாங்கியிருக்காங்க என்று படக்குழு தெரிவிக்க... அட ஏம்பா இப்படி பொய் சொல்றீங்கன்னு போட்டு உடைச்சிருக்கு மலையாள முன்னணி இணையதள செய்தி ஒன்று.
என்ன தெரியுங்களா? ரூ 3.7 கோடிக்கு தான் வியாபாரம் பேசப்பட்டு வருகிறது, யார் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்புவது என்று கேள்வியையும் கேட்டு உண்மையை போட்டு உடைத்துள்ளனர். இது திருஷ்டி பூசணிக்காயை போட்டு உடைச்ச மாதிரியில்ல போயிடுச்சு.
சூர்யாவின் 24 கேரளாவில் ஹிட் அடித்ததால் சிங்கம்-3 நல்ல வியாபாரம் நடக்கும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்காங்க. ஆனால் வியாபாரம் என்னவே எப்போதும் போல் நடக்கவே இவங்களே இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டு இருக்காங்க என்று நம்மாளுங்களே முணுமுணுக்கிறாங்க...