சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் திருமண நிச்சியதார்தம் அண்மையில் நடைபெற்றது.


இதையடுத்து அக்ஷிதா தனது தோழிகளுடன் ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்ற போது, தன் கையில் அணிந்திருந்த 12 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை தொலைத்து உள்ளார். அதன் பிறகு அவர்  போலீசில் புகார் அளித்து, தற்போது போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் ஆகியவற்றை நாம் அறிந்தோம்.


இந்நிலையில் அந்த வைர மோதிரத்தை கண்டெடுத்த லக்ஷ்மன் என்பவர் மோதிரத்திற்கு சொந்தக்காரரிடமே ஒப்படைத்து உள்ளார். இவர் சென்னையை சேர்ந்த டாக்சி ட்ரைவர். அக்ஷிதா கால் டாக்சி புக் செய்து, லக்ஷ்மன் காரில் பயணித்துள்ளார். அப்போது அவர் தவற விட்ட அந்த மோதிரத்தை, லக்ஷ்மன் கண்டெடுத்து அக்ஷிதாவிடமே ஒப்படைத்துள்ளார்.


இதை அறிந்த விக்ரம் டாக்சி ட்ரைவர் லக்ஷ்மனிடம் தனது நன்றிகளை தெரிவித்து, அவரை பாராட்டியுள்ளார்.


Find out more: