சென்னை:
என்னதான் முடிவு விஷால் தமிழகத்தையே பிடிக்கணும் என்பதான் முடிவோ என்று கேள்விக்கணை எழுப்பி இருக்கிறார் ஒருவர். யார் என்று பார்ப்போமா? 


நடிகர் விஷால் சங்கத்தின் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்துள்ளார். இப்போது சங்கம் வாயிலாகவும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இருந்தாலும் தூற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.


அந்த லிஸ்டில் புதிதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இணைந்துள்ளார். இவருக்கு அவர் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. ‘விஷாலின் நடவடிக்கை மீது எனக்கு சந்தேகம். நடிகர் சங்கத்தில் ஏதும் சரியில்லை என அந்த இடத்திற்கு வந்தார்.


இதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றுவேன் என்று கூறுகிறார், அடுத்து என்ன தமிழ் நாட்டைப் பிடிப்பதுதான் இலக்கா? என்று எழுப்பி உள்ளார் கேள்வியை. ஏன் அவரும் தயாரிப்பாளர்தானே சார்... ஏன் டென்ஷன் ஆகுகிறீர்கள் என்று நடுநிலையாளர்கள் சுரேசுக்கு எழுப்பியுள்ள கேள்விக்கு என்ன பதில் என்று தெரியவில்லை.



Find out more: