சென்னை:
அவர்தான்... அவரேதான் "பிட்" அதற்கு சரியானவர் அவரேதான் என்று சொல்லியுள்ளார் இவர்.
யார்? சீயான் விக்ரம்தான். இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் விக்ரம். அப்போது அவர் கூறியதுதான் ஹைலைட்டாக அமைந்துவிட்டது.
ஆரம்ப காலத்தில் அஜித்திற்கு பின்னணி குரல் கொடுத்தவர் விக்ரம்தான். பின்னர் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். சேது படத்திற்கு பிறகு விக்ரமின் கிராப்... எங்கேயோ... போய்விட்டது. அதுபோல அஜித்தின் கிராப்பும்தான்... இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இந்த நிகழ்ச்சியில் மிகவும் அழகாக ட்ரஸ் அணிபவர் அஜித் தான், அவருக்கு எந்த டிரஸ்சாக இருந்தாலும் மேட்ச் ஆகிவிடுகிறது. பெஸ்ட் ட்ரஸிங் என்றால் அஜித் தான் சரியானவர் மனமார தெரிவித்து அப்ளாஸ்களை அள்ளிவிட்டார் விக்ரம். உண்மையை சொல்வதற்கு கூட நல்ல மனது வேண்டும் அல்லவா?