சென்னை:
தன் தங்கையும் சினிமாவில் லைம் லைட்டிற்கு வர வேண்டும் என்று உலகத்தின் வாரிசு நினைக்கிறார். இதற்காக "வீர" நடிகரிடம் ரெக்கமண்ட் செய்தாராம்...


என்ன விஷயம்ன்னா... உலகத்தின் வாரிசில் முதல்வர் அனைத்து மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று பறந்து பறந்து நடிக்கிறார். இவரது தங்கை பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதற்கு பிறகு பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.


இந்நிலையில் "வீர" நடிகரோடு நடித்த பழக்கத்தில் அவருக்கு போனை போட்டுள்ளார் அக்கா நடிகை. என் தங்கைக்கு உங்க படத்தில ஒரு கேரக்டர் கொடுக்கணும் என்று உரிமையுடன் கூற... அப்புறம் நடந்தது கோலிவுட்டே அறியும். அக்கா நடிகைக்காக இப்போ நடிக்கும் தன் படத்தில் தங்கை நடிகைக்கு வெயிட்டான கேரக்டர் கொடுத்துள்ளாராம் "வீர" நடிகர். 


பொழைக்க தெரிஞ்ச பொண்ணா இருந்தா இந்த வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கணும் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தில்..



Find out more: