'விரும்புகிறேன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சினேகா, ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து 2012-ம் ஆண்டு, நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்தார். 


திருமணத்திற்கு பிறகு, 'உன் சமையல் அறையில்', 'ஹரிதாஸ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு சினேகாவிற்கு, விஹான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. 


குழந்தை பிறந்த பிறகு, இவர் திரைப்படங்களில் நடிக்காமல், குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுக்க முடிவு செய்துள்ளார். 


ஆனால் இந்த முறை தமிழ் சினிமாவில் அல்ல மலையாள சினிமாவிற்கு ... என்ன புரிய வில்லையா.... மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு மனைவியாக, புதுப்படம் ஒன்றில்  அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஹனீப் அடெனி இயக்கவுள்ளார்.


இதன் படப்பிடிப்பு வரும் 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாக உள்ளது.


Find out more: