சற்குணம் இயக்கத்தில், விமலின் நடிப்பில் வெளிவந்த 'களவாணி' திரைப்படத்தில், விமலின் தங்கையாக நடித்த மனீஷா, தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
'களவாணி' திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மனீஷா தற்போது நல்ல உடற்கட்டுடன் ஹீரோயின் தோற்றத்தில் உள்ளார்.
இவர் இயக்குனர் சற்குணத்தின் உதவியாளர் ஒருவர் இயக்கும் 'கபே' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் நடிக்கும் கதாப்பாத்திரம் மிகவும் அழுத்தமானது என்பதால், அவர் கிளாமராக நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றன.
சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் இவருக்கு இந்த படம் கை கொடுக்குமா இல்லை காலை வாரி விடுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.