ஐதராபாத்:
காதல்ன்னா சும்மாவா? அதுவும் இது நட்சத்திர காதல் எப்படி இருக்கும். என்ன விஷயம் தெரியுங்களா?
தெலுங்கு திரைப்பட உலகின் ஹாட் டாபிக்கே சமந்தா, நாக சைதன்யா காதல் தான். சும்மாவே கிசுகிசு கிளப்புவார்கள். இவர்கள் காதல் விவகாரம் உண்மை என்று தெரிந்த நிலையில் அவல், வெல்லம், கடலை போட்டு வறுத்து எடுத்தது தெலுங்கு உலகம் என்பது தெரிந்த விஷயம்.
இந்நிலையில் நாகார்ஜீனா தயாரிக்க, தெலுங்கில் நாக சைதன்யா நடித்த ‘ஒக்க லைலா கோசம்’ சமீபத்தில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டானது.
இதற்கிடையில் நாக சைதன்யா நடித்துள்ள ‘பிரேமம்’ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. இங்குதான் இருக்கு விஷயம். இந்த படத்தில் நாகசைதன்யா 3 வேடத்தில் நடிக்கிறார். இதற்கு ஏற்ப சமந்தா தனது சமூக இணையதளத்தில் 3 ஹார்ட்டினை போட்டு மெசேஜ் தட்ட இப்போ அதுதான் செம வைரலாகி வருகிறது. நடத்துங்க.... நடத்துங்க....