சென்னை:
வித்தியாசமே விக்கித்து போய் நிற்கும் இவரை பார்த்து அப்படி ஒரு வித்தியாச சிந்தனை கொண்டவர். இவர் தற்போது தன் மகனை இயக்குனராக களத்தில் இறக்க உள்ளாராம்.


யார் தெரியுதுங்களா? நம்ம பார்த்திபன்தான். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல கலை வித்தகராக வித்தியாச சிந்தனையாளராக வலம் வரும் பார்த்திபன் தனது அடுத்த படமான 'கோடிட்ட இடத்தை நிரப்புக'வில் பிஸியாக இருக்கிறார்.  


இந்நிலையில் இவரது வாரிசுகளும் இயக்குனராக களம் இறங்க இருக்காங்களாம். பார்த்திபனின் மகள் கீர்த்தனா, மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர், விரைவில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

கீர்த்தனா


 பார்த்திபனின் இன்னொரு வாரிசான அவரது மகன் ராக்கி என்ற ராதாகிருஷ்ணனும் விரைவில் இயக்குனராக உள்ளாராம். இந்த படத்தை பார்த்திபனே தயாரிக்கிறார் என்று இறக்கை கட்டிக் கொண்டு செய்திகள் உலா வருகிறது. தற்போது ராக்கி இயக்குனர் விஜய்யிடம்  அசோசியேட் இயக்குனராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போ ஒரே வீட்டில் 3 இயக்குனர்கள்... இதிலும் வித்தியாசம்தான் போங்க...


Find out more: