சென்னை:
சொல்லுங்கப்பா... ஆன்ட்ரியா எப்படி நடிக்கிறார்... ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


ஏங்க ஆன்ட்ரியா நல்லாத்தானே நடிப்பார் இதை போய் கேட்கிறீர்களே என்கிறீர்களா... அவர் நல்லாத்தாங்க நடிப்பார். நாங்க அதை சொல்லலை... வடசென்னை படத்தில் அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றுதான் கேட்டோம்... இந்த குரல் ரசிகர்களுக்கு சொந்தமானது.


வெற்றிமாறன் இயக்க தனுஷ் நடிக்கும் படம் வட சென்னை. இந்த படத்தில் இருந்து சமந்தா விலகிக்கொள்ள அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


படப்பிடிப்பு படு வேகமாக ஆனால் ரகசியமாக நடந்து வருது. இதில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆன்ட்ரியா நடிக்கிறார் என்றார்கள். ஆனால் அவர் நடிக்கும் பாத்திரம் மிக முக்கியமானதாம். படத்தில் அவர் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு கதாபாத்திரம் என்று தகவல்கள் லீக் ஆகி இருக்கு. ஆனால் என்ன கதாபாத்திரம் என்று சொல்ல மறுத்துவிட்டனர். 


Find out more: